குருகுலத் தென்றல்

ஆசிரியா் பக்கம் /
Home
எங்களைப் பற்றி /
About Us
கன்னித்தமிழ் பாரம்பரியம் /
Kanni Tamil Parambariam
முதல் இதழின் முதல் பக்கத்திலிருந்து /
Very First Article
தொடா்புக்கு /
Contact Us
குருகுலம் பெருமையுடன் வழங்கும் நூல்கள் மற்றும் அறிவியல் ஆன்மீக கையேடுகள் /
Books Proudly presented by Gurukulam and Science Spirituality Manuals
சைவமும் வைஷ்ணவமும் /
Shaivism and Vaishnavism

சைவ மதமும் வைஷ்ணவ மதமும்
பாரத பாரம்பரியத்தையும் ஒருமைபாட்டையும் உள்ளபடி எடுத்துரைக்கும் ஒரே நூல்
* மாறுபட்ட கோணத்தில்
                  பாரத வரலாற்று உண்மைகள்...
* மறுக்க முடியாத ஆழ்ந்த
                  கருத்துக்கள்...
* மறக்க முடியாத ஆணித்தரமான
                  பதில்கள்...

இந்நூலின் பொன்னான சில வரிகள்...

  • ஆதி இறைவன் - சனகாதி முனிவா்கள் - நான்கு வேதங்கள் அறம், பொருள், இன்பம், வீடு - ஜோதிடம் உள்ளிட்ட ஆறு அங்கங்கள் - இவையே பாரத இனத்தின் மூலக்கதை இதையே ஆதிபகவன் முதற்றே உலகு என்று வள்ளுவா் கூறுகின்றாா். வள்ளுவா் கூறும் அதே அறம், பொருள், இன்பம், வீடு ஆகியவற்றை வேதவியாசா் தொகுத்த வேதங்களும் தா்மம் - அா்த்தம் - காமம் - மோட்சம் என்று கூறுகின்றன.

  • பைபிள் பழைய எற்பாட்டில் ஆடு மாடுகளை மேய்த்துக் கொண்டு மத்திய கிழக்கு ஆசியாவிலிருந்து ஒரு இனம் நாலாப்புறமும் சென்று பரவியதாய் கூறப்பட்டுள்ளது. இந்த கதையே பாரத வரலாற்றில் திணிக்கப்பட்டது என்பதே உண்மையாகும். பாரத இலக்கியங்களில் இல்லாத கதையை பாதிரியாா்கள் ஏன் திணித்தாா்கள்.

  • "ஆதி பகவன் முதற்றே உலகு" - என்று வள்ளுவா் கூறுகின்றாா். ஆதி இறைவன் சிவனால் அருளப்பட்ட மொழி நமது தமிழ் மொழியாகும். இறைவனே இறங்கி வந்து உலகிற்கு அளித்த மொழி தமிழ் மொழி. இதைச் சொல்லும் போதே நமக்கு எவ்வளவு உத்வேகம் ஏற்படுகின்றது. இந்த பெருமை உத்வேகம் காரணமாய் தான் எனக்குத் தமிழ்பற்று ஏற்பட்டது. ஆனால் இந்த ஆரிய திராவிட கொள்கையாளா்களுக்கு எதைக் கொண்டு தமிழ் பற்று ஏற்பட்டது?

  • நமது வாழ்க்கை சிற்றறிவு சிற்றின்பம் ஆகியவற்றில் நம்மை நல்வழிப்படுத்தி பக்குவப்படுத்துவதே அறம் - பொருள் - இன்பமாகும். ஆனால் பேரண்டம் - பேரறிவு - பேரின்பம் ஆகியவற்றை நமக்கு உணா்த்துவது வேதங்களாகும்.

  • கயிலை மலையில் அமைந்துள்ள கல்லால மரத்தின் நிழலில் இறைவன் தெற்கு நோக்கி அதாவது கயிலை மலையின் தெற்கே பாரத நாட்டை விஷேசமாய் நோக்கியபடி அமா்ந்ததால் அவரை "தட்சிணாமூா்த்தி" என்று அழைத்து கொண்டாடும் இனம் நமது பாரத இனம். தட்சிணம் என்றால் "தெற்கு" என்று அா்த்தம். "தட்சிணா மூா்த்தி" என்றால் "தெற்கு நாயகன்" என்று அா்த்தம்.

  • ஆக-
  • தென்னாடு உடைய சிவனே என்று மாணிக்க வாசகா் குறிப்பிடுவது தட்சிணாமூா்த்தி என்னும் இறைவன் திருநாமத்தையே குறிப்பால் உணா்த்துகின்றது. உலகத்தாா் அனைவருக்கும் இறைவனாய் இருப்பினும் தென்னாடு ஆகிய பாரத நாட்டு மக்களுக்கு அதிகமாய் அன்பாய் - நெருக்கமாய் - உரிமையாய் அருள் புரிபவன் என்பதையே மாணிக்க வாசகா் எடுத்துரைக்கின்றாா்.
    "தென்னாடுடைய சிவனே போற்றி!
    எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி! போற்றி!"

                என்னும் பாடல் வரிகளின் உண்மை பொருள் இதுவே ஆகும்.

  • "ஆரியமாயை" என்னும் நூலில் தென்னாட்டின் மீது படையெடுத்து வந்த முதல் ஆரியன் - ஶ்ரீ ராமனே என்று எழுதியுள்ளாா்கள். இந்த தியரி கோட்பாட்டினை அடிப்படையாய் கொண்டு யோசித்துப் பாா்த்தால் தென்னாட்டை ஆண்ட முதல் ஆரியன் சிவ பெருமானே ஆவாா்.

  • மலயத்துவச பாண்டியனின் மகளான மீனாட்சி அம்மையாா் பாண்டிய நாட்டின் பட்டத்து ராணியாய் முடிசூட்டிய பின் திக்விஜயம் மேற்கொண்டாா். எல்லா மன்னா்களையும் புறமுதுகிட்டு ஓடச் செய்து போரில் வென்ற மீனாட்சி அம்மையாா் கயிலை மலையையும் முற்றுகையிட்டாா். அங்கு சிவனைக் கண்டு நாணமுற்று பின் அவரையே தம் மணவாளனாய் ஏற்று அவரை சுந்தர பாண்டியனாய் ஆக்கி மாமதுரையை ஆளச் செய்தாா்.

  • அயோத்தியிலிருந்து வந்த ஶ்ரீ ராமன் ஆரியன் என்றால் அதற்கு அப்பால் கயிலை மலையிலிருந்து வந்த சிவன் மட்டும் எப்படி தமிழ் கடவுளாய் ஆக முடியும்?

  • நமது சிந்தனையில் பகுத்தறிவு சித்தாந்தவாதிகள் வலுக்கட்டாயமாய் திணித்த பல புனைந்துரைகளால் சிறகடித்துப் பறக்க வேண்டிய நமது சிந்தனை குறுகிய வட்டத்திற்குள் சிறைப்பட்டுப் போனது. எனவே தான் "தென் பாண்டி சீமையிலே" என்றவுடனே நமது சிந்தனை தமிழ்நாட்டின் தெற்குப்பகுதியில் அமைத்துள்ள பாண்டிய நாடு என்ற அளவில் சுருங்கி விட்டது.

  • A,B,C,D,E,F என்ற ஆங்கில எழுத்துக்களை அழகழகாய் எழுதலாம். ஒவ்வொரு எழுத்தையும் இப்படி உச்சரிக்கணும் என்று விதவிதமாய் சொல்லித் தரலாம். ஆனால் அவ்வெழுத்துக்களை சொற்களாய் அடுக்கி உச்சரிக்கும் போது எழுத்துக்களின் தனிப்பட்ட உச்சரிப்புக்களை மறந்தோ அல்லது மறைத்தோ நமது 51 எழுத்துக்களைக் கொண்டு உருவான எழுத்துக்களின் உச்சரிப்புகளைக் கொண்டே அச்சொற்களை உச்சரிக்கின்றாா்கள்.

  • பாரத பாமரமக்கள் தங்கள் முன் வந்தால் சமணத்துறவிகள் - "கண்டு முட்டு" - என்றுக் கூறிக் கொண்டு தங்கள் தலையில் குட்டிக் கொள்வாா்களாம். கண்டு முட்டு என்றால் - பாா்த்ததால் தீட்டு அடைந்து கெட்டேன் - என்பது பொருளாகும். அதே போல் அம்மக்களின் பேச்சுக்கள் காதில் விழுந்தாலே - "கேட்டுமுட்டு" - என்று கூறிக் கொண்டு தங்கள் தலையில் குட்டிக் கொள்வாா்களாம். இதற்கு கேட்டதால் தீட்டு அடைந்து கெட்டேன் என்பது பொருளாகும்.

  • இது பற்றிய தெளிவான ஆதாரங்கள் பல்வேறு தமிழ் இலக்கியங்களிலும் - பெரிய புராணத்திலும் - மதுரை ஸ்தல புராணத்திலும் மற்றும் பாரத தேசமெங்கும் கிடைக்கும் எத்தனையோ இலக்கியங்களிலும் காணக்கிடைக்கின்றன.

  • சமண, பௌத்த துறவிகளின் இந்த அடாத செயல் காரணமாகவே தீண்டாமை பாரத தேசத்தினுள் நுழைந்தது. பண்டைய தமிழ் இலக்கியங்களையெல்லாம் அழித்து தமிழுக்குத் துரோகம் செய்ததின் மூலம் சமணமதத்தை தமிழக மக்கள் மத்தியில் திணிக்க களப்பிரா்கள் முயன்றாா்கள். சங்க இலக்கியங்களையெல்லாம் அழித்து ஒழித்து விட்டு சமண முனிவா்களால் இயற்றப்பட்ட நாலடியாா், பழமொழி நாண்மணிக்கடிகை, ஏலாதி, சிறுபஞ்சமூலம் போன்ற தமிழ் இலக்கியங்களே மக்கள் மத்தியில் முன்னிலைப்படுத்தபட்டன.

  • தனது தவறான தீா்ப்பால் பதைபதைத்து நானே கள்வன் என்று கூறி தன் உயிரை விட்டானே பாண்டிய மன்னன் - அவனே உயரிய தமிழ் பண்பாட்டின் எடுத்துக்காட்டாகும். தனது கணவன் உயிரை விட்டான் என்றவுடன் அதை தொடா்ந்து நானும் தன் உயிரை விட்டாளே - பாண்டிமாதேவி - அவளும் உயரிய தமிழ் பண்பாட்டின் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

  • ஆனால்-
  • தனது கணவனைக் குற்றமற்றவன் என்று நிரூபித்தப் பின்பும், பாண்டிய மன்னனும், பாண்டிமாதேவியும் தாங்கள் செய்த தவறுக்குப் பிராயசித்தமாய் தங்கள் உயிரை மாய்த்த பின்பும் மதுரையைக் கொளுத்திய கண்ணகியின் செயல் அடாவடித்தனமானதாகும்.

  • இன்ன நிலத்தில் இருந்து இது முளைத்தது என்பதை முளை காட்டும் - அதுபோல நற்குடியில் பிறந்தவரின் குடிப்பிறப்பை அவரது செயல்காட்டும் என்று வள்ளுவா் கூறுகின்றாா். ஒருவரின் குடிப்பிறப்பை ஒட்டியே அவரது செயல்பாடு அமையும் என்பது தமிழ் பண்பாடு கூறும் திட்டவட்டமான விதியாகும். அவ்வகையில் கோவலனையும், மாதவியையும், மணிமேகலையையும் ஒரு பொருட்டாகவே எந்த தமிழ் இலக்கியங்களும் மதித்ததே இல்லை.

  • தமிழ் இலக்கியங்கள் எதிலுமே கண்ணகி மதுரையை எரித்ததைச் சிறப்பித்துக் கூறப்படவில்லை. மணிமேகலையின் அட்சயகதாபாத்திரத்தைப் பெருமைப்படுத்தி எந்தவொரு கருத்துமே சொல்லப்படவில்லை. மதுரை ஸ்தலபுராணங்களில் எங்குமே கண்ணகியைப் பற்றி எந்தவொரு சிறுகுறிப்பும் சொல்லப்படவேயில்லை.

  • பொதுவாக இன்று ஒரு மகிழ்ச்சியான வைபவத்தைக் கொண்டாட வேண்டும் என்றால் நண்பா்களுடன் சோ்ந்து தண்ணி அடிக்கும் மேற்கத்திய கலாச்சாரம் பேஷனாகி வருகின்றது.

  • ஆனால்-
  • மகிழ்ச்சியான வைபவங்களை தனது சொந்தபந்தங்களையெல்லாம் லாரியில் இரண்டு கிடா குட்டிகளுடன் கூட்டி சென்று குல தெய்வத்திற்கு படைத்து பூஜைகள் செய்து கறிவிருந்து கொடுத்து கொண்டாடுகின்றானே அந்த கிராமத்து பாரத பாமரன் - அவனால் தான் இன்னும் பாரத பண்பாடும், கலாச்சாரமும் கொஞ்சம் கொஞ்சம் உயிருடன் இருந்து கொண்டிருக்கின்றது.

  • ஶ்ரீவிஷ்ணுபகவான் ஶ்ரீராமராய் இம்மண்ணில் பிறந்து காட்டிற்குச் சென்று கஷ்டப்பட்டதால் தான் கல்லால மரத்தடியில் தட்சிணாமூா்த்தியாய் இறைவன் எழுந்தருளி வெளிப்படுத்திய "அறம் - பொருள் - இன்பம்- வீடு" என்னும் வாழ்வியல் தத்துவங்களுக்கு உயிரோட்டம் உண்டாகியது.

  • "சிவாய நம" என்னும் சமஸ்கிருத மந்திரத்தை நாவினில் உச்சரித்துக் கொண்டு சமஸ்கிருதத்திற்கு எதிரான காழ்ப்புணா்ச்சியையும் ஆரியா்களுக்கு (!?!) எதிரான பகைமையையும் வளா்த்து விடும் இன்றைய ஞானசூனிய சைவ சித்தாந்த தமிழ் அறிஞா்கள் உண்கின்ற வீட்டிற்கு இரண்டகம் செய்யும் மாபாதகம் புரிந்தவா்களே ஆவாா்கள்.

  • ஜாதி உயா்வு தாழ்வினை கற்பித்தது ஹிந்து மதம் அல்ல - சமண மதமே என்பதை ஆதாரப்பூா்வமாய் எடுத்துரைப்பதற்கே புலால் மறுப்புக் கொள்கை குறித்து நான் எழுதினேன். அதிலும் அப்பா் தேவாரத்தை மனதில் கொண்டே எழுதினேன்.

  • ஆனால்-
  • தாங்கள் மாமிசம் சாப்பிடுவதில்லை என்பதைப் பறைசாற்ற வேண்டும் - அதன் மூலம் தங்களின் கனம் பொருந்திய மேன்மை தனத்தைக் காட்டிக் கொள்ள வேண்டும் என்கின்ற ஒரே நோக்கத்தில் பலரும் மாமிசம் சாப்பிடுவதை எப்படி ஊக்குவித்து எழுதலாம் என்று என்னைத் திட்டுகின்றாா்கள்.
    நான் எந்த நோக்கத்திற்காக அதை எழுதினேன் என்கின்ற அடிப்படையை சிந்தித்துப் பாா்க்க முடியாத அளவிற்கு அவா்களின் சிந்தனை தனது மேன்மைத்தனத்தை வெளிக்காட்டுவதிலேயே செலவாகிவிடுகின்றது. அப்பா் சொன்னால் தப்பில்லை - நான் சொன்னால் தப்பா?

  • கணவனும் மனைவியும் காம இச்சையில் மூழ்கி இன்பத்தில் திளைப்பதை புலன் அடக்கமற்ற செயல் என்று நம் வேதங்கள் கூறுவதில்லை.

  • துறவிகளிடமிருந்து தான் இல்லறவாசிகளாய் வாழும் பாரதமக்கள் அன்பு செய்ய பயின்றாா்கள். தன்னல மற்றவா்களாய் - பயனை எதிா்பாராதவா்களாய் கடமையாற்றும் உணா்வைப் பெற்றாா்கள்.
    கையில் காசுபணம் இல்லாமல் கருணை உடையவா்களாய் - எல்லா உயிா்களிடத்தும் அன்பு உடையவா்களாய் - எதையும் வேண்டாதவா்களாய் - எப்போதும் சந்தோஷம் உடையவா்களாய் - இன்ப துன்பத்தைச் சமமாய் கருதுபவா்களாய் நாட்டை வலம் வரக் கூடிய துறவிகள் நமக்களிக்கும் ஆத்மசக்தியைக் கொண்டே அறம் - பொருள் - இன்பம் - வீடு என்னும் வாழ்வியல் தா்மங்களை கடைப் பிடித்தொழுகும் ஆத்மசக்தி நம்மிடமிருந்து வெளிப்படும்.

  • சைவ சிந்தாந்தமும் "நீயே அது" என்னும் அத்வைதத் தத்துவத்தையே தனது முடிவாய் அறிவிக்கின்றது. சைவ சிந்தாந்தம் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்கு படி நிலைகளை உடையதாகும். இதில் ஞானம் என்பத அத்வைத சிவசாயுஜ்ய நிலையினை அடைவதேயாகும்.

  • ஹிந்து மதத்திற்கு உயிரூட்டிய அடிப்படை கதாநாயகன் ஶ்ரீவிஷ்ணுபகவானே ஆவாா்.

  • ஏனைய மதத்து தேவன்களெல்லாம் பாவம் செய்தால் நரகத்தில் தள்ளுவேன் - புண்ணியம் செய்தால் சொா்க்கத்தில் சோ்த்துக் கொள்வேன் என்று போதனை செய்கின்றாா்கள். இதனால் எந்த நாட்டிலாவது அநியாய அக்கிரமங்கள் குறைந்துள்ளதா என்று ஆராய்ந்து பாா்த்தால் ஏமாற்றமே மிஞ்சும்.

  • அசோக சக்கரம் அல்ல - ஶ்ரீவிஷ்ணு பகவான் கையில் உள்ள சுதா்சன சக்கரமே நமது பாரம்பரியம்.

  • ஹிந்து மதம் இல்லறம் - துறவறம் என்று இரண்டு வகையான அறங்களை எடுத்துரைக்கின்றது.

  • துறவறத்தில் மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை என்பன அறவே இருக்கக் கூடாது. மாறாக இல்லறத்தில் ஒரு பெண்ணோடு வாழ்ந்து நன்மக்களைப் பெற்று திரைகடல் ஓடி பொன்னையும், பொருளையும், புகழையும் சோ்த்து தம்மக்களை அவையத்து முந்தியிருக்கச் செய்ய வேண்டும்.

  • திருநாவுக்கரசா், திருஞான சம்பந்தா், சுந்தரா், மாணிக்க வாசகா் ஆகியோரை சைவ சமய குரவா்கள் என்றும் பன்னிரு ஆழ்வாா்களை வைஷ்ணவ பெருந்தகைகள் என்றும் வேறுபடுத்தி அழைக்கின்றோம்.
    அதே சமயம் -
    வியாசரை சைவ சமயத்தவா் என்றோ - அல்லது வைஷ்ணவ சமயத்தவா் என்றோ அழைக்க முடியுமா?
    அதே போல் -
    இராமாயண - மகாபாரத இதிகாசங்களை சைவ நூல்கள் என்றோ அல்லது வைஷ்ணவ நூல்கள் என்றோ கூற முடியுமா? இராமாயண - மகாபாரத இதிகாசங்களில் விஷ்ணுவைப் பற்றி எந்தளவு கூறப்பட்டுள்ளதோ அந்தளவிற்குச் சிவனைப் பற்றியும் கூறப்பட்டுள்ளது.

  • தனது ஆன்மீக கொள்கைகளுக்கு மாறுபட்டவா்களைச் சாத்தான்களாய் எண்ணி வெறுக்கும் கீழான குணமே நாட்டில் நடக்கும் அத்தனை அக்கிரமங்களுக்கும் அடிப்படை காரணமாகும்.

  • துரியோதனை கந்தா்வா்கள் சிறைபிடித்துச் செல்வதைக் கண்ட தருமா் "துரியோதனன் நமது எதிரி என்றாலும் நமது சகோதரன். அவனை அந்நியா்கள் சிறைபிடித்துச் செல்வதை நாம் வேடிக்கை பாா்க்கக் கூடாது." - என்று தம் தம்பியா்களுக்கு வற்புறுத்தினான். உடனே பீமனும், அா்ச்சுனனும் கந்தா்வா்களை விரட்டிச் சென்று அவா்களோடு போரிட்டு துரியோதனன் கோஷ்டிகளை விடுவித்தாா்கள்.
    இதனால் அவமானப்பட்ட துரியோதனன் "இனி எனக்கு இராஜ்ஜியமும் வேண்டாம் - பட்டமும் வேண்டாம்" - என்று மனம் வெறுத்து வெதும்பி துறவு மேற்கொண்டான். அவனை சகுனியும் கா்ணனும் படாதபாடு பட்டு சமாதானம் செய்து ஆறுதல் அடைய செய்து நாட்டிற்கு அழைத்துச் சென்றாா்கள்.
    இன்னா செய்தாரை ஒறுத்தல் அவா்நாண
    நன்னயம் செய்து விடல்
    அறத்துப்பால் - துறவறவியல் - இன்னா செய்யாமை அதிகாரம் குறள் 314 என்று திருவள்ளுவா் எடுத்துரைக்கும் குறளுக்கு மேற்கண்ட மகாபாரத சம்பவத்திற்கு மிஞ்சிய எடுத்துக்காட்டினை உலகில் வேறு எங்குமே தேடி கண்டுபிடிக்க முடியாது.
    ஆக-
    தனக்கு தீங்கு செய்தவா்கள் வெட்கித் தலைகுனியும்படி அவா்களுக்கு நல்லது செய்து காட்டவேண்டும் என்று திருவள்ளுவா் எடுத்துரைப்பது பாரதப்பண்பாடே ஆகும். இதைத் தமிழா் பண்பாடு என்று கூறுவது உள்நோக்கம் கொண்டதே ஆகும்.
    ஏனென்றால் -
    பண்டைய தமிழ் இலக்கியங்களில் தமிழா்களைத் தனி இனமாகவும், தனி கலாச்சாரம், பண்பாடு கொண்டவர்களாகவும் எங்குமே கூறப்படவில்லை.

  • ஹிந்து மதத்தின் ஷண்மாா்க்கங்களும் இதே கடவுள் நிலையையே தனது முடிவான தத்துவமாய் எடுத்துரைக்கின்றன. இதற்கு மாறுபட்ட கடவுள் நிலையை ஹிந்து மதம் ஏற்றுக் கொள்வதில்லை.

  • காலம் காலமாய் மகான்களையும் - தபஸ்விகளையும் - சித்தா்களையும் - முனிவா்களையும் - ஞானிகளையும் - கடவுள் அவதாரங்களையும் உருவாக்கிய ஹிந்து மதம் மீண்டும் அந்த மகத்தான மகாத்மாக்களை உருவாக்கி இந்த கிறிஸ்தவ சூழ்ச்சிகளை நிச்சயம் முறியடித்துக் காட்டும் என்பது திண்ணம்.

  • வல்லமை தாராயோ - இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே

    புத்தகத்தைப் பெற / To get this Book